திருச்சியில் அருகே கால்நடை மருத்துவ முகாம்

திருச்சியில் அருகே கால்நடை மருத்துவ முகாம்

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஸ்ரீரங்கம் கோட்டம் மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு செங்காயன் தலைமை தாங்கினார்..திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்தர் ஷீலா மற்றும்  திருவரங்கம் கோட்டம் உதவி இயக்குனர் டாக்டர் கணபதி பிரசாந்த் முன்னிலை வகித்தார் முகாமிற்கு வந்திருந்த கறவை பசுக்கள் கன்றுகள் காளை மாடு ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட 300 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

கால்நடைகளுக்கு சிகிச்சை இலவச செயற்கை முறை கருவூட்டல் குடல்புழு நீக்கம் செய்யப்பட்டது முகாமில் சிறந்த மூன்று கிடேரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்காக 3 பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன முகாமை ஒட்டி கால்நடை வளர்ப்பு முறை மற்றும் அதற்கான தீவனம் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் இன்பச் செல்வி டாக்டர் சரவணன் டாக்டர் வனிதா டாக்டர் சரவணகுமார் கால்நடை ஆய்வாளர் திருமதி செல்வராணி அன்னலட்சுமி நாகலட்சுமி கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் K. முருகேசன் மகேஸ்வரி  A. முருகேசன் பங்கேற்று பணிபுரிந்தனர் முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn