சாலையில் பசும் பாலை ஊற்றி மாடுகளுடன் விவசாயிகள் மறியல் போராட்டம்

சாலையில் பசும் பாலை ஊற்றி மாடுகளுடன் விவசாயிகள் மறியல் போராட்டம்

பசும்பாலின் கொள்முதல் விலையையும், எருமை பால் கொள்முதல் விலையையும் உயர்த்தி அறிவிக்க கோரி திருச்சி மாவட்டம் துறையூர் ரவுண்டானாவில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பசும்பாலின் கொள்முதல் விலையை 42 ரூபாயாகவும், எருமை பாலின் கொள்முதல் விலையை 51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டி பசும்பாலை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கால்நடை தீவனம் முன்பு போல் மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும், ஒன்றியத்தின் மூலம் பாலுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் உப்பிலியபுரம் தா.பேட்டை முசிறி ஒன்றியங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட  விவசாயிகள் துணைத் தலைவர் மணிவேல், குணசேகரன், ராஜேந்திரன், ராமசாமி, லோகநாதன் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn