திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடித்துவிட்டு 3 பேர் பெண்களை கையை பிடித்து இழுத்து ரகளை -மடக்கி பிடித்த ஆய்வாளர் - பரபரப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடித்துவிட்டு 3 பேர் பெண்களை கையை பிடித்து இழுத்து ரகளை -மடக்கி பிடித்த ஆய்வாளர் - பரபரப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் குடித்துவிட்டு  3 பேர் மத்திய பேருந்து நிலையத்தில் வில்லியம்ஸ் ரோட்டில் வரக்கூடிய  பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளனர். பெண்களிடம் தகராறு செய்து கையை பிடித்து இழுத்தும் மேலும் இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். கண்டோன்மென்ட் காவல்துறையினர் தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொழுது தப்பித்து ஓடிய போது திருச்சி ஒத்தக்கடை பகுதியில் 
கண்டோன்மென்ட் ஆய்வாளர் சேரன் விரட்டி
அவர்களை மடக்கி பிடித்தார்.

தற்போது காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் சுமார் 30 நிமிடம் பரபரப்புடன் காணப்பட்டது.விசாரணை நடத்தியதில் கார்த்தி என்பவர் கட்டிட வேலைகள் செய்யும் மேஸ்திரி .இவர் ஜெரோம் மற்றும் வடிவேலுக்கு பொங்கல் தின விருந்து திருச்சி மத்திய பேருந்து நிலைய டாஸ்மாக் மதுபான கடையில் கொடுத்துள்ளார். போதை அதிகமானதால் கார்த்தி, ஜெரோம், வடிவேல் 3 பேரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ரகளையில் ஈடுபட்ட பொழுது கீழே விழுந்து கார்த்தியின் மண்டையும் உடைந்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் .வடிவேலு, ஜெரோம்விடம் காவல்நிலையத்தில்  விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn