ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள் வாக்குவாதம் பரபரப்பு

ஸ்ரீரங்கம்  கோவில் இணை ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள் வாக்குவாதம் பரபரப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நாளை(01.01.2023) அதிகாலை வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு  அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  


முக்கிய பிரமுகர்கள் மற்றும் சந்தனு மண்டபத்திற்கு நான்காயிரம் ரூபாயும், கிளி மண்டபத்திற்கு 700 ரூபாய் அனுமதி சீட்டுகளும் விண்ணப்பித்து அதனை  கொடுக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி பொறுப்பாளர்கள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வீட்டை  முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நான்கு நாட்களாக வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் கலந்து கொள்ள பாஸ் கொடுக்காமல் அலக்கழிப்பதாக கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது அவருடன் இருக்கும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி பாலு ஆக்ரோஷமாக அவர்களிடம் சண்டையிட்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பின்னர் காவல்துறை வந்து பாஜக தொண்டர்களை அங்கிருந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு. தன் வீட்டிற்கு வந்து தன்னை தாக்கம் முயன்றதாக புகார் அளித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn