400ஆண்டு காலம் பாரம்பரியமிக்க இஸ்லாமிய அடக்கஸ்தலம் இடிப்பு - எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த தர்ஹா அன்னார்பாக் தர்கா இந்த தர்ஹா 2.18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த தர்காவில் திருச்சி தென்னூர், உறையூர், பீமநகர், பாலக்கரை, பல்வேறு பகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் வழிபாடு செய்தும், சந்தனக்கூடு திருவிழா நடத்தி வருவதும் வழக்கம்.
இந்த தர்கா 1952ல் வக்போர்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த இடத்தில் நாகராஜ் என்பவர் தனக்கு அங்கு சொத்து இருப்பதாக கூறி வழக்கு தொடர்கிறார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது நாகராஜ் நீதிமன்றத்தில் கருவேலமரம் அதிகமாக இருப்பதால் இடத்தை சுத்தம் செய்வதற்கு உத்தரவு பெற்று மாநகராட்சி அதிகாரிகளுடன் அதிகாலையில் மின் இணைப்பை துண்டித்து
அங்கிருந்த பழமை வாய்ந்த முன்னோர்கள் நினைவு சமாதிகளை தரைமட்டம் ஆக்கியுள்ளனர். இந்த தகவல் கேள்விப்பட்டவுடன் இஸ்லாமிய பொதுமக்கள் அங்கு கூடியதால் அதிகாரிகள் மற்றும் நாகராஜ் பொக்லின் இயந்திரங்களுடன் தப்பிச் சென்றனர்.
பின்னர் அப்பகுதியில் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் கூடியதால் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இடித்த கல்லறைகளை கட்டித் தருவதாக உத்தரவாதம் அளித்த பின் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn