ஊட்டச்சத்து மாதம் - திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

ஊட்டச்சத்து மாதம் - திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

திருச்சி மாநகர, மாவட்ட காவல்துறை, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்டம், சைல்டுலைன் ஆகியோர் இணைந்து ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு குழந்தைகள், பெண்கள் ஆரோக்கியம் மற்றும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபாவதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம், மாநகர காவல்துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிந்துநதி, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் முரளி ஆகியோர் குழந்தைகளுக்கு இணை உணவு அவசியம், சத்தான காய்கறிகள், தானிய வகை, இரும்பு சத்துள்ள உணவுப் பொருட்கள் குறித்தும்,
குழந்தை திருமண தடுப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 ,பெண்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 181,1091 மற்றும் கேடயம் திட்ட தொலைபேசி எண்கள் 6383071800, 938450 1999  குறித்து விழிப்புணர்வாக கல்லுக்குழி மேம்பாலம் அருகில் உள்ள கட்டிட தொழிலாளர்களுக்கும், அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள சாலையோர குடியிருக்கும் மக்களுக்கும், மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

                    Advertisement