மழைநீர் சேகரிப்பு மற்றும் பொழுதுபோக்கு மையங்களாக மாறும் கல்குவாரிகள்

மழைநீர் சேகரிப்பு மற்றும் பொழுதுபோக்கு மையங்களாக மாறும் கல்குவாரிகள்

திருச்சி மாநகரில் உள்ள கைவிடப்பட்ட மூன்று கல்குவாரிகள் மற்றும் கொல்லங்குளம் ஏரியை மக்கள் பயன்பாட்டிற்காக புதுப்பித்து பிரம்மாண்ட மழைநீர் சேகரிப்பு மற்றும் பொழுதுபோக்கு மையங்களாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநகரில் 45வது வார்டு பொன்நகரிலுள்ள ஒரு ஏக்கர் நிலம்.

பெரியமிளகுபாறை அரசு போக்குவரத்து கழகம் மண்டல அலுவலகம் பின்புறம் 5 ஏக்கரிலும், கருமண்டபம் பகுதியில் கல்லுடைக்கும் பாறை என்ற பெயரில் 3 கைவிடப்பட்ட குவாரிகள் உள்ளன. ஏற்கனவே கற்களை உடைத்து எடுக்கப்பட்ட இந்த இடங்கள் நூற்றுக்கணக்கான அடி ஆழம் கொண்ட பள்ளங்களாக உள்ளன.

புதுப்பித்து பிரம்மாண்ட மழைநீர் சேகரிப்பு மையங்களாக மக்கள் பொழுதுபோக்க பகுதிகளாகவும் மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 10 பேர் கொண்ட ஆர்கிடெக்ட் குழுவினர் ஆய்வு செய்து முன்மொழிவு அறிக்கை அளித்துள்ளனர். தயாரிப்பில் குழுவில் இடம்பெற்ற ஆர்கிடெக்ட் விஜயகுமார் நம்மோடு பகிர்ந்து கொள்கையில், இந்த பெரும் நகரங்களில் நீர் ஆதாரங்களே பாதுகாத்தல்  பெரும் சவாலாக உள்ளது. 

வளர்ந்து வரும் நகரங்களில் குளங்கள் ஏரிகள் அளிக்கப்படும் பொழுது இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களை மேற்கொள்ளும் பொழுது அவ்இடங்கள் அப்பகுதி  மக்களின் பயன்பாட்டிற்கு நேரடியாக சென்றடையும். இதற்காக இரண்டு கல் குவாரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர் இங்கு வந்து சேரும் வகையில், குவாரிகளில் நெறிப்படுத்தி புதுப்பித்து மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் சாலைகளில் ஓடும் நீரை மடை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மழைக்காலங்களில் பகுதியில் மழை நீர் சாலைகளில் தங்குவது தவிர்க்கப்படும். பின்னர் இந்த நீரை சுத்திகரித்து இங்கிருந்து அல்லது அருகில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி அதில் இருந்து மக்களுக்கு  பயன்பாடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட முன்மொழியப்பட்டுள்ளது.

பெரிய மிளகுபாறை கல்குவாரியில் நீச்சல் குளம் மூன்று குவாரிகள் அருகிலேயே ஆம்தி தியேட்டர்கள் மரக்கன்றுகள் கொண்ட பசுமை மரங்கள் நடைப்பயிற்சி தளங்கள் ஆகியவற்றை அமைத்து மக்களுக்கான பொழுதுபோக்கு பகுதிகளாகும் மாற்றும் திட்டம். குழந்தைகள் பூங்கா ஃபுட் கோர்ட் விளையாட்டு வீரர்களுக்கான தலமாக இடத்தை மாற்றுவதற்கான நலத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

கொல்லங்குளம் ஏரி எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம் ஆகிய பகுதிகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. 50 ஏக்கர் நிலப்பரப்பில் நகரத்திற்கு 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கலாம். அதேசமயம் இது இயற்கையாகவே ஏரி பகுதியாக இருப்பதால்  நீரினை சுத்திகரித்து தூய்மையாக பராமரித்து வந்தால் பறவைகள் தங்கும் இடமாகவும், ஒரு தீவை போன்ற அமைப்பை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கலாம். 

இப்பகுதியைப் ஒரு சுற்றுலாத் தலமாகவும் மாற்றலாம். பொதுவாகவே பொதுமக்களுக்கு நீர்நிலை உள்ள பகுதிகளில் தங்களுடைய நேரங்களை செலவிடுவதில் அதிகம் விரும்புவர். எனவே பசுமையான சூழலும் குளிர்ச்சியானபுறச் சூழலும் பொதுமக்களிடையே அதிக ஆர்வத்தை தூண்டும். அதுமட்டுமின்றி கல் குவாரிகளை நாம் பாதுகாக்கும் போது பல்வேறு விபத்துகளிலிருந்து தவிர்க்கப்படுகிறது. பல உயரங்களில் இருந்து விலங்குகள், ஆடு, மாடுகள் போன்ற பள்ளத்தில் மாட்டிக்கொள்வதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மக்களின் பயன்பாட்டிற்காக இந்த நான்கு திட்டங்கள் நல்ல பயன்தரும் என்றார். மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வுகளில் நிறைவடைந்ததும், மதிப்பீடு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இது குறித்து சில மாற்றங்களுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY