30 வழக்கு மற்றும் அல்லித்துறை சாமியாருடன் தொடர்புடைய பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

30 வழக்கு மற்றும் அல்லித்துறை சாமியாருடன் தொடர்புடைய பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருச்சி மாநகரம் பொன்மலை காவல் நிலைய எல்லையில் உள்ள ஒயின்ஷாப்பில் அத்துமீறி உள்ளே நுழைந்து மது பாட்டில்களை எடுத்து சென்றதாக 27.6.2020 ஆம் தேதி பிரபல ரவுடி ஜெய் என்கிற ஜெயக்குமார் என்ற கொட்டப்பட்டு ஜெய், அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்படி வழக்கின் புகார்தாரர் 20.07.2021 ஆம் தேதி ரவுடி ஜெய் என்கின்ற கொட்டப்பட்டு ஜெய் வழிமறித்து நீ நீதிமன்றம் சென்று சாட்சி சொன்னால் கொன்று விடுவேன் என்றும்

தனக்கு காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் நெருங்கிய தொடர்பு உள்ள அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்தி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்தி ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தன்னை என்கவுண்டர் லிஸ்டில் இருந்து பெயர் நீக்குவதாகவும், வழக்குகளை முடித்துக் கொடுப்பதாக தன்னை எதிர்த்து யாரும் சாட்சி சொல்லும் பட்சத்தில் அவர்களை கொலை செய்து விடுங்கள் என்று அல்லித்துறை சாமியார் கூறியதாகவும் கொட்டப்பட்டு ஜெய் சாட்சியங்களை மிரட்டியதாக தெரிய வருகிறது.

எனவே ரவுடி ஜெய் என்கின்ற கொட்டப்பட்டு ஜெய் அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்தி ஆகியோர் தொடர்பினை வைத்துக்கொண்டு அரசியல் துறை மற்றும் காவல் துறையினரிடம் செல்வாக்கு உள்ளது போல் உரையாடியது மக்களின் ஒரு பிரிவினர் இடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரை பெற்று பொன்மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் மேற்படி வழக்கின் விசாரணையில் போலி சாமியார் என்ற பாலசுப்பிரமணியம் தன்னை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக காண்பித்து பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்பட்ட நபர் போலி சாமியார் என்று தெரியவந்ததால் போலி சாமியார் தேஜஸ் என்ற பாலசுப்பிரமணியம், சுமார் 30 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி ஜெய் என்கின்ற கொட்டப்பட்டு ஜெய், அவருக்கு துணையாக செயல்பட்ட வழக்கறிஞர் கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி ஜெய் என்கிற ஜெயக்குமார் என்கின்ற கொட்டப்பட்டு ஜெய் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாகவும், அவரது தொடர் குற்ற நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையிட்டார். அதன்படி தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் ஜெய் என்கிற ஜெயக்குமார் என்கின்ற கொட்டப்பட்டு ஜெய் குண்டர் தடுப்பு காவல் ஆணையர் ஆய்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் யாரேனும் முக்கிய பிரபலங்களின் பெயர்களை போலியாக பயன்படுத்தி பொது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறையின் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr