பெரிய வணிக நிறுவனங்கள் நாங்களும் தரைக் கடைக்கு லெவலுக்கு இறங்குகிறோம் - கோவிந்தராஜுலு பேட்டி
தீபாவளி பண்டிகை என்றாலே மூன்று மாதத்திற்கு முன்பே திருச்சி என்.எஸ்.சி போஸ் ரோடு, சின்னக் கடை வீதி பெரிய கடை வீதி மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்பொழுது திருச்சி தடைவீதிகளில் பொதுமக்கள் வர முடியாத நிலை வாகனங்களையும் காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளது.
இந்நிலையில் ஒன்று இரண்டு மூன்று என இருந்த தரைக்கடையில் தற்பொழுது 600க்கும் மேற்பட்டவைகளாக அதிகரித்து விட்டன விதிமுறைகளை மீறி நடைபாதையில் தரைக் கடைகளை போட்டுக்கொண்டு பொதுமக்கள் பெரிய வணிக நிறுவனங்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தரைக்கடைகளுக்கு சிலர் குட்வில் வாங்கிக் கொண்டு ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என அதிக அளவில் வசூலித்து கடை போட வைக்கின்றனர். இவர்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும். இது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் அமைச்சர் என அனைவரிடம் முறையிட்டு விட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மாநகராட்சி ஆணையரிடம் இது குறித்து கேட்ட பொழுது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
தடையாணை பெற்றுள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால் 18 கடைகள் மட்டுமே தடை ஆணை பெற்றுள்ளது. 600-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது இவர்கள் அனைவரும் இப்படி தரையில் கடைகளை போடும்பொழுது பெரிய வணிக நிறுவனங்களும் தீபாவளி முடித்தவுடன் தங்களது கடைக்கு முன்னதாக தரைக் கடைகளை போடும் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை,சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது.இதுவரை 15 சதவீதம் மட்டுமே விற்பனை நடந்துள்ளதாகவும் தரைக்கடை வியாபாரிகளால் பொதுமக்கள் வாகனங்கள் உள்ளே வர முடியவில்லை என கோவிந்தராஜுலு செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டி உள்ளார்.
இவர்களால் பெரும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே அதிகாரமிக்கவர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் தீபாவளி முடிந்தவுடன் தங்களது வணிக நிறுவனத்திற்கு முன் நாங்களும் கடைகளை போட்டுக் கொள்வோம். சொத்துவரி, ஜி எஸ் டி வரி, வருமான வரி தண்ணீர் வரி, குப்பை வரி எதையும் கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
இன்னும் ஐந்து நாட்களே தீபாவளிக்கு உள்ளது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் சேர்ந்த 2000 குடும்பத்தினர் உள்ளனர். அவர்களை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் தீபாவளி பண்டிகைக்கு பிறகு தொடர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision