திருச்சி என் எஸ் சி போஸ் ரோட்டில் தரக்கடை வியாபாரி விபரீத முடிவு - பரபரப்பு

திருச்சி என் எஸ் சி போஸ் ரோட்டில் தரக்கடை வியாபாரி விபரீத முடிவு - பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்க மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜிலு செய்தியாளர்களுக்கு என்எஸ்சி போஸ் ரோட்டில் பேட்டி அளித்தார். அப்பொழுது தரைக்கடை வியாபாரிகளால் பெரிய வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தகவலறிந்த தரைக்கடை வியாபாரிகள் குறிப்பிட்ட தனியார் வணிக நிறுவனத்திற்கு முன்பு வந்து அமர்ந்து செய்தியாளர்களிடம் கோவிந்தராஜுலு கொடுத்த பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி தரைக்கடை வியாபாரிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரி திடீரென தலையில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக அமர வைத்தனர். அவர் தொடர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். தரக்கடை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜிலு எங்களை மிரட்டுகிறார் நாங்கள் யாரையும் மிரட்டவில்லை.

பொதுமக்களுக்கு இடையூறாக நாங்கள் இல்லை என தங்களது தரப்பை தெளிவுபடுத்தினர். கோவிந்தராஜ் எங்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிடுகிறார் நாங்கள் பொது நலத்துடன் சேவைகளையும் செய்து வருகிறோம் .எங்கள் மீது ஏன் இவருக்கு இவ்வளவு கோபம் தரைக்கடை வியாபாரிகள் தொழிலை அழிக்க துடிக்கிறார் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision