உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்ட ரூ. 6 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த லேப்டாப், செல்போன்  உள்ளிட்ட ரூ. 6 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் திருவெறும்பூர் உதவி ஆய்வாளர் ரமேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சாலையில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை ரமேஷ் குமார் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாமல் 8 லேப்டாப், 3 ஸ்மார்ட் வாட்ச், 14 ஆண்ட்ராய்டு செல்போன்கள் என ரூ 6 லச்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.அதன் அடிப்படையில் இரண்டு பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்த பொழுது கூத்தைப்பார் வ உ சி நகரை சேர்ந்த ஜாபர் அலி (42 ), மன்னார்குடி மகாதேவ பட்டினத்தைச் சேர்ந்த நதர்ஷா (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் விமான நிலையத்திலிருந்து கொண்டு வந்ததாக கூறியுள்ளனர்.

ஆனால் அவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாமல் திருச்சி விமான நிலையத்திலிருந்து எப்படி கொண்டு வந்தார்கள் என்று சந்தேகமடைந்த போலீசார் உரிய ஆவணத்தை காண்பித்து பொருட்களை நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி வழக்கு பதிவு செய்ததோடு அவர்கள் இருவரையும் சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision