பொதுமக்கள் மனுக்கள் - மண்டலம் 3 - 4ல் மேயர் கள ஆய்வு

பொதுமக்கள் மனுக்கள் - மண்டலம் 3 - 4ல் மேயர் கள ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வாரந்தோறும் திங்கள் கிழமை மேயர் மு.அன்பழகன், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக மேயரிடம் கொடுக்கிறார்கள்.

அந்த மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் மேயர் மாநகராட்சி அலுவலர்களுடன் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்களுடன் உரிய களஆய்வு மேற்கொண்டு வருகிறார். குறைதீர்க்கும் முகாமில் மண்டலம் 4 வார்டு எண் 56க்கு உட்பட்ட கருமண்டபம் திருநகர், ஆல்பா காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேயர் அன்பழகன், மண்டல தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், மாமன்ற உறுப்பினர் மஞ்சுளாதேவி ஆகியோருடன் சென்று நேரில் பார்வையிட்டு புதை வடிகால் பணி நிறைவடைந்த சாலைகளை மழைக்காலத்திற்குள் சாலைகள் புதிதாக போடப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்கள். 

மேலும்,வார்டு எண் 65 பகுதி வலன் நகர், ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஓம் சக்தி கார்டன் குடியிருப்பு நல சங்கம் சார்பில் அனைத்து நகரில் உள்ள இணைப்பு சாலைகளை புதிதாக தார் சாலை அமைத்து தரும்படி கேட்டுக் கொண்டார்கள். மேயர் நேரில் பார்வையிட்டு விரைவில் ஒப்பந்த புள்ளி கோரி சாலைகளை அமைக்கப்படும் என அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தார்கள். மேலும், தெருவிளக்கு தொடர்பாக கோரிக்கை வைத்தார்கள் அதை உடனடியாக செய்து தருவேன் என்று உறுதி அளித்தார்.

 

பின்னர், மண்டலம் எண் 3 .வார்டு எண் 40, 41பகுதியைச் சேர்ந்த இந்திரா நகர், டி நகர், ஐ.ஏ.எஸ் நகர் குடியிருப்பு நல சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்திருந்தார் அப்பகுதிகளையும் மாண்புமிகு மேயர் அவர்கள் நேரில் பார்வையிட்டு சிறு பாலம் கட்டும் பணிஉடனடியாக கட்டப்படும் எனவும், தார் சாலை அமைக்கும் பணியையும் விரைவில் அமைக்கப்படும்,மழைநீர் வடிகால் வாய்க்கால் உடனடியாக தூர்வாரப்படும் எனவும் பொதுமக்களிடம் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வில் மண்டல தலைவர் துர்கா தேவி,செயற்பொறியாளர், கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் சண்முகம், சரவணன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், மாமன்ற உறுப்பினர்கள் மஞ்சுளா தேவி, கோவிந்தராஜ் மற்றும் இளநிலை பொறியாளர்கள், குடியிருப்பு நலச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision