திருச்சியில் 4 பேருக்கு கொரோனா - ஆட்சியர் புதிய கட்டுப்பாடு

திருச்சியில் 4 பேருக்கு கொரோனா - ஆட்சியர் புதிய கட்டுப்பாடு

திருச்சி அரசு மருத்துவமனையில் 4 பேர் கோவிட் தொற்று உடைய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனையில் தனியாக கோவிட் வார்டு அனைத்து மருத்துவ வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. இந்த நான்கு பேரும் பெண்கள்.

மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அவர்களை பார்க்க வருபவர்கள் அனைவரும்  முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மருத்துவமனை முதல்வர் நேரு அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 40 பேரிடம் கோவிட் தொற்று உள்ளதா என்பதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 60 பேரிடம் நாள் ஒன்றுக்கு மாதிரிகள் எடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளர்.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி முன் களப்பணியாளர்கள் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் மட்டும் தற்போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மூன்று நாட்களில் குணமடைந்து இல்லம் திரும்புவதாக தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvisionn