கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறுக்கு எதிர்ப்பு மறியல் போலீஸ் தடியடி - பஸ் கண்ணாடி உடைப்பு

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறுக்கு எதிர்ப்பு மறியல் போலீஸ் தடியடி - பஸ் கண்ணாடி உடைப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 50 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து லால்குடி தொகுதிக்குட்பட்ட 105 கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க பணிகள் மேற்கொள்வதை தடுத்து அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் போராட்டக்காரர்களை கைது செய்ய கொண்டு வந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததனால் போலீஸ் லேசான தடியடி நடத்தினர். இதனை தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட 67 பேரை லால்குடி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.


திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 105 கிராமங்களுக்கு குடிநீர் அமைக்கும் பணி ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2021 _ 22 ஆம் ஆண்டில் ரூ 243 கோடி செலவில் இடையற்றுமங்கலம் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அமைக்கும் பணியினை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் துவங்கினர்.

 அங்கு போதிய குடிநீர் வசதி இல்லாததால் இத்திட்டத்தை கைவிட்டு கீழன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் மற்றும் பல்வேறு இடங்களில் 47 சம்புகள் அமைக்கும் பணியில் 37 சம்புகளை அமைத்தும் 384 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப்பு குழாய்கள் அமைக்கும் பணியினை 260 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் எடுத்தால் இப்பகுதி விவசாயம் பாதிக்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பது உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி கீழன்பில் ,நடராஜபுரம் ,ஜங்கமராஜபுரம் , குறிச்சி ,செங்கரையூர் ,அரியூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி ஆர் டி ஓ சிவசுப்பிரமணியன் , லால்குடி காவல் டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது பணிகள் 50 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்த நிலையில் இத்திட்டத்தினை கைவிட முடியாது என அதிகாரிகள் கூறினர்.

பேச்சுவார்த்தை நடத்திய போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு பேருந்தில் கைது செய்து கொண்டு செல்ல முயன்ற போது ஒரு சிலர் அரசு பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இந்நிலையில் கல்வீசு சம்பவம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்ளிட்ட 65 பேரை லால்குடி போலீசார் கைது செய்து லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

 சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் எஸ் பி வருண்குமார் நேரில் வந்து ஆய்வு செய்து மேலும் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாதவாறு போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.