20 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட உப்பு

20 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட உப்பு

ஹைதராபாத்தில் இருந்து 58 வேகன்ங்களில் 3700 டன் தொழில்துறை பயன்பாட்டிற்காக உப்பு சரக்கு ரயில் மூலம் திருச்சி கோட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்தத் தொழில்துறை பயன்பாட்டிற்காக உப்பு மொத்தமாக திறந்த வேகங்களில் ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்துறை உப்பு ஏற்றுதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் நான்கு ரேக்குகள் உப்பு ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி கோட்டத்தில் இருந்து இந்த புதிய சரத்தை ஏற்றுதல் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் பெறுவதோடு வசதியான விரைவான மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து மூலம் தொழிற்சாலைகளுக்கு பயன்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO