வந்தது வந்தே பாரத்... இனி படுத்துக்கொண்டே பயணம் செய்யலாம் !!

வந்தது வந்தே பாரத்... இனி படுத்துக்கொண்டே பயணம் செய்யலாம் !!

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த நவீன ரயில் பெட்டி தயாராக உள்ளதாகவும் விரைவில் மெட்ரோ ரயிலும் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் : நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வே வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் உட்கார்ந்து பயணம் செய்யும் ரயிலை இயக்குகிறது. ஆனால் இப்போது அதன் புதிய பதிப்பாக ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள. மேலும், வந்தே மெட்ரோ ரயிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயக்கப்படும். இந்த நிதியாண்டில் வந்தேவின் ஸ்லீப்பர் பதிப்பை வெளியிட உள்ளதாக இன்டக்ரல் கோச் பேக்டரி பொது மேலாளர் பி.ஜி.மல்லையா தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் வந்தே மெட்ரோவும் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஏசி அல்லாத பயணிகளுக்காக, ஏசி அல்லாத புஷ் புல் ரயில் அக்டோபர் 31ம் தேதி தொடங்கப்படும் என்றும் மல்லையா கூறினார். இதில் 22 பெட்டிகள் மற்றும் ஒரு இன்ஜின் இருக்கும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியாக மாற தயாராக உள்ளது என்றார். அதே நேரத்தில், மெட்ரோ ரயில் பெட்டிகளும் தயார் நிலையில் உள்ளன என்றவர் இந்த ரயிலில் பதினொன்று 3 அடுக்கு பெட்டிகள், நான்கு 2 அடுக்கு பெட்டிகள் மற்றும் 1 முதல் அடுக்கு பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த ரயில் ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு இயக்கப்படும். இந்த ரயில் தயாராகிவிட்டதாகவும், 2024 மார்ச் 31-ம் தேதிக்கு முன் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ​​தற்பொழுது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக வெள்ளை மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் ஆரஞ்சு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் புதிய நிறத்தில் கொண்டு வரப்படாது என்றும் அதே வண்ணங்களில் மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் என்றார், இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே மெட்ரோ ரயில் தொடங்கப்படும் என்று மல்லையா கூறினார். இயக்குதல் குறித்து அவர் கூறியதாவது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கண்டிப்பாக இது தொடங்கப்படும் எனத்திட்டவட்டமாக தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision