எக்ஸெல் அக்ரோ சார்பில் மலர்களிலிருந்து ஊதுபத்திகள் மற்றும் நறுமண கூம்புகள் தயாரிப்பதற்கான பயிற்சி

எக்ஸெல் அக்ரோ சார்பில் மலர்களிலிருந்து ஊதுபத்திகள் மற்றும் நறுமண கூம்புகள் தயாரிப்பதற்கான பயிற்சி

திருச்சி எக்ஸெல் குழும நிறுவனத்தின் ஒரு அங்கமான எக்ஸெல் அக்ரோ மற்றும் மத்திய அரசு நிறுவனமான 'மத்திய மருத்துவ மற்றும் நறுமண பயிர்களின் ஆராய்ச்சி நிறுவனம்' (CSIR-CIMAP) இணைந்து, அரோமா மிஷனின் கீழ்,

திருச்சி, திருவெறும்பூர், ஜெய் நகர் காமராஜர் அரங்கத்தில், பயன்படுத்தப்பட்ட மலர்களிலிருந்து ஊதுபத்திகள் மற்றும் நறுமண கூம்புகள் தயாரிப்பதற்கான பயிற்சி மற்றும் செயல் விளக்கத் திட்டம் நடைபெற்றது. இதில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு இந்த தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

இதில் கலந்து கொண்ட பெண்கள் தங்கள் கைகளால் ஊதுபத்திகள் செய்தனர். இந்த நிகழ்வில் மத்திய அரசு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகளான Dr.Alok Kalra, Dr.Sudaresn, Dr.Sanjay Yadav, Dr.Rajesh Kumar, Dr Ramesh Kumar, Dr.Priyanka, Dr.Ram Rajasekaran (Former Director - CSIR-CIMAP) மற்றும் திருச்சி எக்ஸெல் குழும நிறுவனத்தின் தலைவர் M.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய எக்ஸெல் குழும தலைவர் M.முருகானந்தம்..... "இந்த பயிற்சி மற்றும் செயல் விளக்கத்தின் மூலம் பயன் பெற்ற இந்த பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, எக்ஸெல் அக்ரோ மூலமாக தொடர்ந்து ஊதுபத்தி தயாரிப்பதற்கான பணிகள் வழங்கப்பட்டு அவர்கள் சுயமாக சம்பாதிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக எக்ஸெல் குழுமம் துணை நிற்கும்" என்றார்.

இந்த நிகழ்வில் CIMAP மற்றும் எக்ஸெல் அக்ரோ ஆகியவற்றிற்கிடையே "ஊதுபத்தி தயாரிப்பு தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம்" கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாட்டையும் எக்செல் குழும நிறுவனம் பொறுப்பேற்று மிக சிறப்பாக செய்திருந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision