திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் தடை.

திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் தடை.

ஆவின் பாக்கெட் பால் கொண்டு வந்து இறக்கும் வேன்களுக்கு வாடகை இரண்டு மாதமாக தரவில்லை என்பதால் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 80 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு பால் பாக்கெட்களாக திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் நிலையத்தில் உள்ளது. 500 முகவர்கள் உள்ளனர்.

அவர்களிடம் ஆவின் நிர்வாக அதிகாரிகள் நீங்கள் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் வாடகை பணம் தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இன்று காலை பொதுமக்களுக்கு ஆவின்பால் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. 44 வேன்கள் மூலம் தினமும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேன்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை பாக்கி உள்ளதாக வேன் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 11 மாதத்தில் இது ஐந்தாவது முறை போராட்டம் நடத்தப்படுவது உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆவின்பால் விநியோகிக்கும் வேன் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஆவின் அதிகாரிகளுடன் வேன் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிறிய வேன் மூலம் பால் பாக்கெட்களை கொண்டு செல்ல ஆவின் நிர்வாகம் ஏற்பாடுஏற்பாடு செய்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision