சாலை நடுவே மூடி வாகன ஓட்டிகள் காலி

சாலை நடுவே மூடி வாகன ஓட்டிகள் காலி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் ஏற்கெனவே சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் இந்த சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடிகள் உள்ளன. இந்த 7 பாதாள சாக்கடை மூடிகள் சாலையின் மேற்பகுதியில் வேகத்தடை போன்று உள்ளது.

இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்படுகிறது. மேலும், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகும் நிலை உருவாகி உள்ளது. இதுக்குறித்து பலமுறை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மிக பெரிய விபத்து நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr