ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவர்களுக்கு சிறந்த சேவைக்கான  விருது

ரோட்டரி கிளப் சார்பில்   மருத்துவர்களுக்கு சிறந்த சேவைக்கான  விருது

கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரின் சேவையும் மகத்தான ஒன்றாகவே கருதப்படுகிறது.
 மருத்துவர்களின் தன்னலமில்லா சேவை தான் இன்றைக்கு இந்த பேரிடர் காலகட்டத்தினை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை பெறுவதற்கு ஒரே நம்பிக்கையாக இருக்கின்றது.
 மருத்துவர்கள்பலரும்   இந்த பேரிடர்  காலகட்டங்களில் மருத்துவ சேவையோடு நிறுத்தாமல் நோயாளிகளுக்கு தேவையானவற்றை கிடைக்க செய்திடும் வகையில்  சமூக அக்கறை கொண்டு செயலாற்றிய மருத்துவர்களினை கௌவுரவிக்கும் விதமாக திருச்சி ரோட்டரி கிளப்  திருச்சிராப்பள்ளி போர்ட்   (ROTARY CLUB OF TRICHIRAPALLI FORT)கடந்த 15 ஆம் தேதி   ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்து அதில் ரோட்டரி கிளப் சார்ந்த  மருத்துவர்களுக்கு மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும்  "Service above self award"  என்ற விருதினை வழங்கி உள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி போர்ட்டின்   தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறுகையில்,  
எப்போதுமே மருத்துவர்களின் சேவை மகத்தான ஒன்று தான்.
 ஆனாலும் இந்த பேரிடர் காலகட்டத்தில் இவர்களுடைய பங்கு மிகவும்  சிறப்பானதாக  கருதினோம்.

ஏனெனில், இக்காலகட்டத்தில் மருத்துவ சேவைகள் வழங்குவதோடு  நோயாளிகளுக்கு    அவசரமாகத் தேவைப்பட்ட உபகரணங்கள்    அரசிடமிருந்து கிடைப்பதற்கு முன்பாகவே ரோட்டரி கிளப்,லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகள் மூலமாக நோயாளிகளுக்கு விரைவில் கிடைத்திட வேண்டி கிட்டத்தட்ட ஒன்றரை கோடி அளவில்    உபகரணங்கள் குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் படுக்கைகள்,ஆக்சிஜன் வசதி கூடிய படுக்கைகள் போன்ற மருத்துவ உபகரணங்கள் நோயாளிகளுக்கு கிடைக்கப் பெற்றதில் இவர்களுடைய முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது.

 தொடர்ந்து இவர்களுடைய சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டது.
டாக்டர் கே.செந்தில் குமார்,
 டாக்டர் ஆர்.வருண்பிரசன்னா, டாக்டர் பிரேம் ஆனந்த்,
 டாக்டர் தாயுமானவன், 
டாக்டர் வி.ஐயப்பன் சங்கர், டாக்டர் எம்.ஹரி மெய்யப்பன்,டாக்டர் அருண் சேஷாசலம்,டாக்டர் அண்ணாமலை பெரியண்ணன்  ஆகியோருக்கு இந்த கொரானா காலத்தில் பெரும் பங்காற்றியதற்காக  இந்த   விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேபோன்று சமூக அக்கறையோடு செயல்பட்ட  சுகாதார பணியாளர்கள் ,குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிகளான  வசந்தி, லலிதா,பரிமளா,  
டாக்டர்.பொன்னி சியாமளா,
கார்த்திகா ராணி ஆகியோரும் கௌவுரவிக்கப்பட்டனர்.  

சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் மீனாட்சிசுந்தரம்   விழாவில் கலந்துகொண்டு  விருதுகளை வழங்கியுள்ளார்.டாக்டர்.ஐயப்பன் சங்கர்  இதுபற்றி கூறுகையில், மருத்துவர்களாக எங்களுடைய சேவையை தொடர்ந்து செய்வோம்  குறிப்பாக இந்த கொரானா  காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான எல்லா வகையிலும் உதவிட வேண்டுமென்று நாங்கள் முயற்சித்தோம் அந்த முயற்சிக்கு இன்றைக்கு கிடைத்திருக்கும் இந்த விருதானது மேலும் எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது.
 தொடர்ந்த மக்களுக்கான சேவையில் இயங்குவதற்கான உந்து சக்தியாக உள்ளது என்றும் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH