மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி மாவட்ட வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில்... தமிழ்நாட்டில் மண்டேலா என்ற தமிழ் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் எங்களுடைய மருத்துவ சமுதாயத்தை இழிவுப்படுத்தும் விதமா எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மண்டேலா திரைப்படத்தில் எங்கள் தொழிலான முடிதிருத்தத்தை மிகவும் இழிவு செய்யும் படியான காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் முடிதிருத்தம் செய்யக்கூடிய பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் மனதை புண்படுத்தும்படி உள்ளது.

இதுவரையிலுமே எங்கள் தொழிலை செய்பவர்களை கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படம் எங்களை மிகவும் புண்படுத்துகிறது. எனவே குறிப்பிட்ட காட்சிகளை அகற்ற வேண்டும் அல்லது இந்த திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும். மேலும் திரைப்படத்தை வெளியிட்டுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம், மண்டோலா திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின், திரைப்பட குழுவினர் மீதும் சட்டபூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்டப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று இக்கட்சியின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr