கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய திருச்சி காவலர்கள் - ஆணையர் பாராட்டு
திருச்சி மாநகரில் மொத்தமாக 1769 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கொரோனா நோய் தொற்று காலத்திலும் சுயநலம் பாராமல் பொதுநலன் மட்டுமே கருதி காவல்துறையில் பணியாற்றிய அதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து பணிக்கு திரும்பியுள்ளார்கள்.
Advertisement
திருச்சி மாநகரில் நான்காவது கட்டமாக இன்று 21.11.2020 கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய 32 காவல் ஆளினர்களை அவர்களது பணிகளை பாராட்டி அவர்களை வரவேற்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையர் J.லோகநாதன் தலைமையில், காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) A. பவன்குமார் ரெட்டி, இ.கா.ப., காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து)
R. வேதரத்தினம் ஆகியோர்கள் மேற்பார்வையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பாக மகத்தான காவல் பணியை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு" பணி பாராட்டு சான்றிதழ்" மற்றும் பழங்கள், முககவசங்கள், ஊட்டச்சத்து பானங்கள், பேரிச்சம்பழம், கையுறை, சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.