திருச்சி கலிபா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உள்ளிருப்புப் போராட்டம்

திருச்சி கலிபா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உள்ளிருப்புப் போராட்டம்

திருச்சியில் சில குடும்பங்களை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வரும் கலிபா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வக்பு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி உக்கடை அரியமங்கலத்தில் கலீபா பள்ளிவாசல் உள்ளது. இந்தப் பள்ளிவாசலில் சுமார் 250இஸ்லாமியர்கள் ஆங்கத்தினராக உள்ளனர்

இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் பல வருடங்களாக இஸ்லாமிய மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடியிருக்கும் சில குடும்பங்களை மட்டும் ஊர்நீக்கம் செய்வதாக பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்து. இது தொடர்பாக ஊர் நீக்கம் செய்யப்பட்ட பொதுமக்கள் கலிபா பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்பு வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் திருச்சி மாவட்ட வக்பு வாரிய அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடர்ந்து நீதிமன்றத்தை அணுகிய நிலையில் கலிஃபா பள்ளி நிர்வாகிகள் வக்பு நிர்வாகத்திற்கு ஏதிராகவும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.மேலும் பல ஆண்டுகளாக தேர்தலில் நடத்தாமல் இருந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை, மற்றும் முதன்மை செயல் அலுவலர்( வக்பு நிர்வாகம் உத்தரவிட்டும் கலிபா பள்ளிவாசல் நிர்வாகம் தேர்தல் நடத்தாதது ஏன் தேர்தல் அறிவிப்பு எண் 1ஒட்டியும் நிர்வாக தேர்தல் நடத்தாமல் உள்ளனர். மேலும், தங்களது இஷ்டத்திற்கு நிர்வாகிகளாக அபுசாலி, முகமது ஹபீஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பின் நிர்வாகி உமர்பாரூக்  ஆகியோரை நிர்வாகியாக அறிவித்து செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறையிலும், வக்பு வாரிய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று ஊர் நீக்கம் செய்யப்பட்ட பொதுமக்கள் திருச்சி பாலக்கரையில் உள்ள வக்பு வாரிய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி பளித்த ஷாஜகான்

இதுவரை வக்பு வாரிய அலுவலகத்தில் ஊர் நீக்கம் செய்யப்பட்ட பொதுமக்கள் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, தொடர்ந்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வக்பு வாரிய அலுவலக நிர்வாகிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சிலருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, உடனடியாக ஊர் நீக்கம் செய்யப்பட்ட மக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் மேலும், கலிபா பள்ளிவாசலுக்கு சொந்தமான அந்த மக்களிடம் உரிய சந்தாவை பெற்று அவர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision