நீர்வளதுறை முதன்மை தலைமை பொறியாளரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை
திருச்சி முக்கொம்பில் நீர்வளதுறை முதன்மை தலைமை பொறியாளர் (சென்னை) காவிரியில் முக்கொம்பில் அமைந்துள்ள கதவணை மராமத்து பணியினை ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையில் தற்பொழுது உள்ள நிலையில் நீர் திறக்கப்பட இயலாத நிலை உள்ளபடியால் தமிழக அரசு மத்திய அரசின் கர்நாடக அரசை தொடர்பு கொண்டு காவிரி வழக்கு உச்சநீதிமன்ற வழக்கின் அடிப்படையில் நீர் திறந்துவிடப்பட்டு தமிழக விவசாயிகளை காப்பாற்றபட வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு
திருச்சி முக்கொம்பில் ஆதார்டு காட்டன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சென்னை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன் அவர்கள் இம்மாதம் (30.06.2024) அன்று ஓய்வு பெறுவதை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மற்றும் காவிரி டெல்டா சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision