மூத்த குடிமக்களுக்கு முத்தான நல்ல செய்தி ! FDக்கு 9.6 சதவிகிதம் வரை வட்டி

மூத்த குடிமக்களுக்கு முத்தான  நல்ல செய்தி ! FDக்கு 9.6 சதவிகிதம் வரை வட்டி

மூத்த குடிமக்களுக்கு தங்களுது முதலீட்டில் நல்ல வருமானத்தை வழங்க மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும், இப்போது பல வங்கிகள் இந்த திட்டத்தை விட FD க்கு அதிக வட்டி கொடுக்கின்றன. இந்த வங்கிகளில் உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி, யெஸ் வங்கி, பந்தன் வங்கி மற்றும் ஜன் சிறு நிதி வங்கி ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.

யெஸ் வங்கி : இத்தனியார் துறை வங்கி மூத்த குடிமக்களுக்கு FD மீது அதிகபட்சமாக 8.25 சதவிகித வட்டியை வழங்குகிறது.

பந்தன் வங்கி : இந்த வங்கி 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு 8.35 சதவிகித வட்டியை வழங்குகிறது.

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி : இந்த வங்கி மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.75 சதவிகித வட்டியை அளிக்கிறது.

Utkarsh Small Finance Bank : இவ்வங்கி மூத்த குடிமக்களின் FDக்கு 8.6 சதவிகித வட்டியை வழங்குகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி : இவ்வங்கி தங்களது 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது.

ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், மூத்த குடிமக்கள் FDக்கு 9 சதவிகித வட்டியை வழங்குகிறார்கள்.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி : மூத்த குடிமக்கள் தங்கள் FDக்கு 9.5 சதவிகித வட்டியை வழங்குகிறது.

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி - இந்த வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை வழங்குகிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இங்கிருந்து அதிகபட்சமாக 9.60 சதவிகித வட்டியைப் பெறலாம்.

மேற்கண்டவை எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் வரும் வங்கிகள். ஆகவே எவ்வித அச்சமும் இன்றி இங்கே டெபாசிட் செய்து உங்கள் முதலீட்டை பாதுகாத்துக்கொள்ளுங்கள். தனியாரிடம் சென்று கவர்ச்சிகரமான வட்டிக்காக் ஏமாறாதீர்கள். வயதான காலத்தில் முதல் முக்கியமல்லவா !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision