அருள்மிகு சங்கிலி கருப்பண்ணசாமி கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழப்பெருங்கலூர் ஊராட்சியில் அருள்மிகு சங்கிலி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் தமிழ்நாடு முழுவதும் 13 சமுதாய மக்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் வழிபாட்டு வருகின்றனர்.
ஒரு கால பூஜை நடைபெறும் இக் கோயிலில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பூசாரியாக இருந்து பூஜை செய்தது வருகிறார். தினசரி காலை 7 மணிக்கு கோயில் நடை திறந்து இரவு எட்டு மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி 28ஆம் தேதி குடிப்பாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து 50க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி மிகப்பெரிய அளவில் விருந்து மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இப்படி சிறப்புமிக்க கோயில் உள்ளே இருந்த உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்து சென்ற நிலையில் கோயில் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு அவரது வீட்டிற்கு சென்றார். மீண்டும் காலை கோவிலை திறக்க வந்த போது உண்டியல் நெழிந்தும் உடைந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோயில் பூசாரி, இதுக்குறித்து அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தகவல் கூறினார்.
பின்னர் லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஒருவர் கடப்பாரையுடன் வந்து கோயிலை உடைக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. இதே கோயிலில் இந்தாண்டு மே 17ஆம் தேதி கோயில் உண்டியலை உடைத்து மூன்று லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision