"திருச்சி புத்தகத்திருவிழா" - ரொக்க பரிசு அறிவிப்பு

"திருச்சி புத்தகத்திருவிழா" - ரொக்க பரிசு அறிவிப்பு

திருச்சி புத்தகத்திருவிழா (27.09.2024) முதல் (06.10-2024) முடிய திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான புத்தக அரங்குகள் மற்றும் சிறார் அரங்கம் இடம்பெற உள்ளன.

ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு உரைகளுடன், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழாவினையொட்டி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கட்டுரைப்போட்டி, பொது நூலகத் துறை மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது சொந்த அனுபவத்தை "என்னை மேம்படுத்திய வாசிப்பு” என்ற தலைப்பில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி தாங்கள் வசிக்கும் ஊருக்கு அருகாமையில் உள்ள பொது நூலகத்துறை நூலகங்களில் தங்களது கட்டுரைகளை (22.09.2024)-ற்குள் ஒப்படைக்க வேண்டும்.

பொதுமக்களால் ஒப்படைக்கப்படும் கட்டுரைகள் சம்பந்தப்பட்ட நூலகரால், அந்தந்த தாலுக்கா மைய நூலகரிடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு தாலுக்கா மைய நூலகத்தில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளில் தாலுக்கா அளவில் அமைக்கப்படும் தேர்வுக் குழுவினரால் மூன்று சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட மைய நூலகத்தில் ஒப்படைக்கப்படும்.

தாலுக்கா அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று கட்டுரைகள் மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்படும் தேர்வுக்குழு மூலம் நேர்க்காணல் நடத்தி முதல் மூன்று சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.5,000/- மூன்றாம் பரிசாக ரூ.3,000/- மற்றும் சான்றிதழ்கள் புத்தகத்திருவிழாவின் நிறைவு நாளன்று வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision