தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

கரூர் மாவட்டம், தோகைமலை வட்டம் புழுதேரி கிராமத்தில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக (ICAR) வேளாண் அறிவியல் மையத்தில் நாளை  டிசம்பர் 8 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் தேனீ வளர்ப்பின் முக்கிய அம்சங்கள், வளர்ப்பு தேனீ வகைகள், தேனீ பெட்டி எண்ணிக்கை அதிகரிப்பது, இடத்தேர்வு, பயிர் மகசூல் அதிகரிப்பது, கோடைகால பராமரிப்பு, பூச்சி நோய் நிர்வாகம், வியாபார யுக்திகள்,

மதிப்பு கூட்டுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9843883221

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO