திருச்சி மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளுர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சி மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளுர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஸ்ரீரங்கம் வட்டம். ஸ்ரீரங்கம் “அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற (06.05.2024) திங்கட்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ் உள்ளுர் விடுமுறையானது 2024 பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் / பணியாளர்களுக்கு பொருந்தாது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision