திருச்சி உள்பட 6 கோட்டங்களில் அதிகரிக்கப்படும் ரெயில்களில் வேகம்.

திருச்சி உள்பட 6 கோட்டங்களில் அதிகரிக்கப்படும் ரெயில்களில் வேகம்.

தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 கோட் டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரெயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெயில் பாதை மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களில் விரைவு ரெயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், ஜோலார் பேட்டை, சென்னை சென்ட்ரல் - ரேணி குண்டா வழித்தடத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் வரை ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு ரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிக் காக மட்டும் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில்..... நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2024-25- ம் நிதியாண்டுக்கு 10 சதவீதம் கூடுதல் நிதி கிடைத்துள்ளது. இதனால், பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, ரெயில் தண்டவாளம் புதுப்பித்தல், மேம்படுத்தல், நவீனப்படுத்தல் மற்றும் சிக்னல் மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள் ளப்படும். இதன் மூலமாக, அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரெயில்களை இயக்க முடியும். வருகிற மார்ச் மாதத்துக்குள் ஜோலார்பேட்டை - சேலம் - கோவை மார்க்கத்தில் ரெயில் வேகத்தை 130 கிலோ மீட்டராக அதிகரிக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, (2025-26)-ம் நிதியாண்டில், சென்னை எழும்பூர் - விழுப்புரம் - திருச்சி மார்க்கத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டருக்கு ரெயில் வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் - மதுரை - நெல்லை மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் (2026-27) -ம் நிதியாண்டில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வரை ரெயில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பாலங்களை வலுப்படுத்தல், பாதை வளைவுகளை எளிதாக்குதல், தண்டவாளத்தைக் கடந்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைத்தல், சிக்னல்களை மேம்படுத்தல், உயர்மட்ட மின்பாதை மேம்படுத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றை நிறைவேற்றுவது மூலமாக, ரெயிலின் வேகம் அதிகரித்து பயண நேரம் கணிசமாக குறையும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision