ஹெல்மெட் கொடுத்த போக்குவரத்து காவலருக்கு நேர்ந்த பரிதாபம்

ஹெல்மெட் கொடுத்த போக்குவரத்து காவலருக்கு நேர்ந்த பரிதாபம்

திருச்சியிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் அகிலன், திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பி.என்.டி.காலனி அருகில், தனது மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த ஹெல்மெட்டை எடுக்க வண்டியை நிறுத்தியுள்ளாா்.

அப்பொழுது அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில்  இருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து காவலா் ஸ்ரீதர் (45) என்பவர் சாலையில் விழுந்த ஹெல்மெட்டை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார் வேகமாக அகிலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காவலா் ஸ்ரீதர் தலையில் பலத்த காயமடைந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுக்குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn