திருச்சி மாவட்டத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் முழு விவரம்

திருச்சி மாவட்டத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் முழு விவரம்

மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 75 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகின்றன.

சட்டப்பேரவையில் மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அருகருகே உள்ள கடைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ளவை, நீதிமன்ற உத்தரவு உள்ளவை உள்ளிட்ட கடைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் (ஜூன் 22) முதல் 500 கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில், திருச்சி மாநகரில் வயர்லஸ் சாலை, பாபு ரோடு, பெரிய கடை வீதி, அண்ணாமலை நகர், தங்கேஸ்வரி நகர் வடக்கு, பிராட்டியூர் கிழக்கு, குழுமிக்கரை சாலை,

மெக்டொனால்ட்ஸ் சாலை, தேவதானம், கோணக்கரை சாலை, திண்டுக்கல் சாலை (சகாயம் பில்டிங்), நவல்பட்டு சாலை (திருவெறும்பூர்), காந்தி மார்க்கெட், செவலூர் (மணப்பாறை), கல்லக்குடி, பூவாளூர் கிழக்கு ஆகிய 15 கடைகள் மூடப்படுகின்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn