திருச்சி மாநகர காவல் ஆயுதப்படையில் ஆய்வு மற்றும் குறைதீர்க்கும் முகாம்

திருச்சி மாநகர காவல் ஆயுதப்படையில் ஆய்வு மற்றும் குறைதீர்க்கும் முகாம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் காவலர்களின் குறைதீர்க்கும் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

திருச்சி மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆயுத காப்பறை மற்றும் பண்டகம் ஆகியவற்றை ஆய்வு செய்து பொருட்களை மாநகர காவல் ஆளினர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். திருச்சி மாநகரத்தில் காவலர்களின் குறைகளை களைவது தொடர்பாக 07.05.22ந் தேதியன்று காலை 11.00 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குறைகளை கேட்டார்.

இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர 
காவல்துறையில் பணிபுரியும், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள், காவல் 
ஆளினர்கள் கலந்து கொண்டு பதவி உயர்வு, சம்பள குறைபாடு, வீடு மாற்றம் 
ஆகியவற்றில் உள்ள குறைகளை தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை 
எடுக்கப்படும் என காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார். இம்முகாமில் 
திருச்சி மாநகர துணை ஆணையர் (தெற்கு சரகம்) முத்தரசு கலந்து கொண்டார்.

இதேபோன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக காவலர்களின் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளினர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் 
தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO