திருச்சி மாவட்டத்தில் 8,13,001 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது

திருச்சி மாவட்டத்தில் 8,13,001 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண இரண்டாம் தவணைத்தொகை தலா ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்களை தமிழகத்தில் உள்ள 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி  திருச்சி மாவட்டத்தில் கடந்த 15.05.2021ஆம் தேதி முதல் 98 சதவீத அளவிலான அதாவது 7,93,472 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 158.69 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2 சதவீதம் அதாவது 19,521 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்பொது இதன் தொடர்ச்சியாக இரண்டாம் தவணை கொரோனா நிவாரணத் தொகையாக ரூ. 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1224 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 81,3001 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு என மொத்தம் ரூபாய் 162.60 கோடி மதிப்பில்  வழங்கப்படவுள்ளது.  இதில் அரிசி பெறும் AAY, OAP,  ANP மற்றும் காவலர் குடும்ப அட்டைதாரர்களும் பயன் பெறுவர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve