உண்டியல் வசூலினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், தாயகம் காக்கும் தன்னலமற்ற பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ள படைவீரர்கள் / முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 7-ஆம் தேதி படைவீரர் கொடிநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (07.12.2022) உண்டியல் வாயிலாக கொடிநாள் வசூலினை துவக்கி வைத்தார்.
சென்ற ஆண்டு சிறப்பாக கொடிநாள் வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், முன்னாள் படைவீரர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி படைவீரர்கள் தேசத்திற்காற்றிய தன்னலமற்ற சேவையினை நினைவு கூர்ந்து அவர்களை கௌரவித்தார். முன்னாள் படைவீரர் நலத்துறையின் துணை இயக்குநர் லெப்.கமாண்டர். தி.சங்கீதா (ஓய்வு), முன்னாள் படைவீரர் நல அலுவலக செயல்பாடுகள் குறித்து விளக்கவுரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் கொடிநாளுக்கு வசூல் பணியாற்றிய மாவட்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். மேலும், போர் விதவையர்களுக்கும், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கும் மற்றும் இரண்டாம் உலகப் போர் விதவையர்களுக்கும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து திருமண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, புற்றுநோய் நிதியுதவி, மனநலம் குன்றிய சிறார்களுக்கான நிதியுதவி,
பக்கவாத நிதியுதவி, மாதாந்திர நிதியுதவி, இரண்டாம் உலகப்போர் நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் இம்மாவட்டத்தில் 535 முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கு மொத்தம் ரூ.2.06 கோடி வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் மானியமாக தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் 06 நபர்களுக்கு ரூ.6 இலட்சம் வழங்கபப்பட்டுள்ளது. தொகுப்பு நிதியின் வாயிலாக வங்கிக்கடன் வட்டி மானியமாக 08 நபர்களுக்கு ரூ.70 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக 309 நபர்களுக்கு ரூ.34.82 இலட்சமும், வருடாந்திர பராமரிப்பு மானியமாக என 11 நபர்களுக்கு ரூ.2,75 இலட்சமும் கடந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர் வேலைவாய்ப்பு பதிவின் அடிப்படையில் 25 நபர்களுக்கு மத்திய / மாநில அரசுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. 2021 படைவீரர் கொடிநாள் வசூலில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ரூ.4.12 கோடியும் மாநகராட்சி ரூ.19,60 இலட்சமும், தமிழ்நாட்டில் 3ஆவது இடமாக அதிகபட்சமாக வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. படைவீரர் கொடிநாள் 2022-க்கு வசூல் இலக்காக அரசு ரூ.4.09 கோடியும் மாநகராட்சிக்கு ரூ.20.69 இலட்சமும் நிர்ணயித்துள்ளது.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர் மற்றும் அவர் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO