மணப்பாறை நகர்மன்ற கூட்டத்தை நான்கு வார காலக்கெடுக்குள் நடத்த மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

மணப்பாறை நகர்மன்ற கூட்டத்தை நான்கு வார காலக்கெடுக்குள்   நடத்த மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

மணப்பாறை நகர் மன்ற கூட்ட்ததை 4-வார காலக்கெடுக்குள் கூட்டம் நடத்த மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவினால்- மணப்பாறை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியின் நகர்மன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்து, மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 11, அதிமுக 11 என சமபலத்ததுடன் இருந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 நபர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை அவர்களாகவே முன் வந்து அளித்தனர்.

இதன் காரணமாக திமுக பலம் 16-ஆக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலை நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலரும், நகராட்சி ஆணையருமான எஸ்.என்.சியாமளா முன்னிலையில் நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான முறைமுக தேர்தலில் திமுக சார்பில் 25-வது வார்டு உறுப்பினர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், அதிமுக சார்பில் 18-வது வார்டு உறுப்பினர் பா.சுதா ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

பின்னர் நடைபெற்ற வாக்களிப்புக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த பா.சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், 12 வாக்குகள் பெற்று கீதா ஆ.மைக்கேல்ராஜ் வெற்றியை வாய்ப்பை நழுவவிட்டார் எனவும் அறிவிக்கப்பட்டது. 11 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அதிமுக 15 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 16 உறுப்பினர்களை கொண்ட திமுக தோல்வியை தழுவியுள்ளது. திமுக கோட்டையை தற்போது அதிமுக கைப்பற்றிய நிலையில், 

நகர்மன்ற துணைத் தலைவர் தேர்தல் அறிவித்தும் 2 முறை திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ள ததால் நகர்மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, தற்பொழுது வரை தேர்தல் நடைபெறாoல் உள்ளது.

இதனிடையே அதிமுக சேர்மன் நகர்மன்ற கூட்டம் நடத்த முயற்சி செய்தும் நகராட்சி அலுவலகம் கூ ட்டம் நட்த்த போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை, இதனால் அதிமுகவினர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ,தொடுத்தனர்.

மனு மீது விசாரணையில் மணப்பாரை நகராட்சி கூட்டம் 4 - வார காலக்கெடுக்குள் கூட்டம் நடத்த உத்திர விட்டது, இதனால் மணப்பாறை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO