இ-பாஸ் பெற இணையதளம் முகவரி அறிவிப்பு

இ-பாஸ் பெற இணையதளம் முகவரி அறிவிப்பு

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கோடை வெயில் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குளாகி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், குளிர் மாவட்டங்களான கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு பொதுமக்கள் அதிகளவு செல்கின்றனர்.

இதற்கிடையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், மே 7 முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.

உள்ளூர் மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் நடைமுறை குறித்து இந்தியா முழுவதும் விளம்பரம்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊட்டி மட்டும் கொடைக்கானலுக்கு செல்ல விரும்புவோர் இ பாஸ் பெற புதிய இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. New E-Pass Website Launched for Tourists to #Ooty and #Kodaikanal https://tnega.tn.gov.in

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision