மாற்றத்திறனாளிகளுக்கு ரூ 11.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மாற்றத்திறனாளிகளுக்கு ரூ 11.33 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் இன்று (03.12.2022) நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே என்.நேரு  52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 11.33 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார்,  எம்.பழனியாண்டி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்  சந்திரமோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO