இந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி

திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 21-வது சீனியர் நேஷனல் அளவிலான இருபால் ரோல்பால் போட்டிகள் நடைபெற்றது.
இதில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உள்பட 28 மாநில வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் லீக் போட்டிகள் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றது.போட்டிக்கு அகில இந்திய ரோல்பால் பவுண்டர் ராஜ்தபாபி தலைமை வகித்தார்.
தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ரோல் பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், சங்க துணைத்தலைவர்கள் சரவணன், பிரேம்நாத், மற்றும் சங்க உறுப்பினர்கள் ராஜசேகர் ,ராபின், மணிகண்டன், மற்றும் ரோல் பால் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று போட்டியை சிறப்பாக நடத்தினார்கள்.இறுதி சாம்பியன்ஷிப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு பெண்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப்பை பெற்றது.பின்பு வெற்றி பெற்ற அணிகளுக்கு பிகார் மாநில விளையாட்டு முதன்மை ஆலோசகர் சுதன்சுசேகர்ராய் தலைமையில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி.எஸ்.கே பெரியசாமி மற்றும் ரோல்பால் சங்க நிர்வாகிகள் கேடயம் பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டனர்.இதில் இருபால் 600 -க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision