காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி- மேயர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடுஅரசு சுற்றுச்சூழல் துறை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கல்வித்துறை, தேசிய பசுமை படை இணைந்து நடத்தும் மாணவ, மாணவிகளின் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி இன்று (புதன்கிழமை) திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், உதவி ஆணையர் நிவேதா ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். மாவட்ட கல்வி அலுவலர் செல்வி, தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் என். விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அந்தோணி லூயிஸ் வரவேற்றார்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அகஸ்டின் பொன்னையா, திருச்சி மாநகராட்சி இடைநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ் கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சி முடிவில் புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஜெயராஜ் நன்றி கூறினார். இந்தப் பேரணி பிஷப் ஹீபர் பள்ளியில் தொடங்கி வெஸ்ட்ரி பள்ளியில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து பேரணியை ஜான் வெஸ்டுரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைமன் சுகுமார் நிறைவு செய்து வைத்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn