9 வந்தே பாரத் ரயில்கள் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார் நரேந்திர மோடி!!

9 வந்தே பாரத் ரயில்கள் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார் நரேந்திர மோடி!!

சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சா லையில் தயாரிக்கப்பட்ட, 26 'வந்தே பாரத்' ரயில்கள் பல் வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும், ஏசி' பெட்டிகளாகவும், சொகுசு ரயிலாகவும் இருக்கின்றன. இந்நிலையில், நாடுமுழுவதும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி, இன்று (24.09.2023) கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் - ஜெய்ப்பூர், தமிழகத்தில் நெல்லை - சென்னை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் - கர்நாடக மாநிலம் பெங்களூர், ஆந்திரமாநிலம் விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக), பீகார் மாநிலம் பாட்னா - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா, கேரள மாநிலம் காசர்கோடு - திருவனந்தபுரம், ஒடிஷாவில் ரூர்கேலா - பூரி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மேற்குவங்க மாநிலம் ஹவுரா, குஜராத் மாநிலம் ஜாம்நகர் - அகமதாபாத் ஆகிய தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது.

ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் இதுபற்றி கூறியதாவது... பிரதமர் துவக்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில்கள் அந்த தடங்களில் இயக்கப்படும் அதிவேக ரயிலாக இருக்கும். இதனால், பயணிகளின் கணிசமான பயணம் நேரம் குறையும். நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப்பார்வைக்கு ஏற்ப,

ரூர்கேலா - புவனேஸ் வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி மதுரை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய வழிபாட்டு நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுவது, திருப்பதி யாத்திரை மையத்திற்கு சிறந்த இணைப்பை உண்டாக்கும்.

உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்த ரயில்கள் நவீன, விரைவான மற்றும் வசதியான பயண வழிமுறைகளை வழங்குவதற்கான ஒரு முக்கியப்படியாக கருதப்படுகிறது. என்ன விலைதான் சற்று அதிகம் என பயணிகள் தரப்பில் கவலை தெரிவிக்கிறார்கள். அதிகாரிகள் தரப்பிலோ விமான கட்டணத்தைவிட குறைந்த கட்டணம் தான் என சொல்லி சமாளிக்கிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision