திருச்சி விமான நிலைய ஓடு பாதையில் சென்ற தேர்

திருச்சி விமான நிலைய ஓடு பாதையில் சென்ற தேர்

திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே, பிறையடி கருப்பு கோவில் உள்ளது. ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவின் போது, விமான நிலையத்தின் ரன்வே பகுதியில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு சென்று, சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்படும். அதன்படி, விமான நிலையத்தின் ரன்வே செல்வதற்கான பெரிய கேட் திறக்கப்பட்டு, அதன் வழியாக, கருப்பு கோவிலில் இருந்து புறப்பட்ட, அய்யனார் எழுந்தருளிய சப்பரம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் ரன்வேயில் சென்று, காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். அதன் பின், அதே வழியாக மீண்டும் புறப்பட்ட சப்பரம் ஊர்வலம் கருப்பு கோவிலுக்கு வந்தது. இதில், கோவில் பூசாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, விமான நிலையம் அருகே உள்ள கொட்டப்பட்டு கிராம மக்கள், இதற்கான சிறப்பு அனுமதி பெற்று, இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, விழா நடத்துவதற்கு முன், கொட்டப்பட்டு முக்கிய பிரமுகர்கள் விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, சிறப்பு அனுமதி வழங்குகின்றனர்.

மேலும் விமான நிலையத்தின் ரன்வே பகுதியில் உள்ள அய்யனார் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகிகள் மற்றும் மருளாளி என 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக கேமிரா, செல்போன், இரும்பு பொருட்கள், தீ பெட்டி போன்றவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

G-QSXGXN2B7K