300 கிராமங்களில் நவராத்திரி விழாவை கொண்டாட உதவி வரும் ஸ்ரீமான் அறக்கட்டளை

300 கிராமங்களில் நவராத்திரி விழாவை கொண்டாட உதவி வரும் ஸ்ரீமான் அறக்கட்டளை

கிராமப்புற மக்களிடையே நவராத்திரி விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து, திருச்சி ஸ்ரீமான் அறக்கட்டளை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட கிராமங்களை "தத்தெடுத்தது". அனைத்து ஒன்பது நாட்களுக்கும் தானியங்கள் உட்பட அத்தியாவசியங்கள் பொம்மைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

"ஒற்றுமை விழா என்று அழைக்கப்படும், நவராத்திரி விழாவை முந்தைய ஆண்டுகளில் மக்கள் அதை ஒரு பாரம்பரிய முறையில் கொண்டாடினர். ஆனால் தற்போதைய தலைமுறையினருக்கு ஆண்டின் மற்றொரு நாள் போல ஆக்கிவிட்டது. பலரும் விழாவின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை இழந்துவிட்டனர். இதனால் எங்கள் ஸ்ரீமான் அறக்கட்டளையின் மூலம் திருச்சியில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, தற்போதைய தலைமுறைக்கு பாரம்பரிய திருவிழாவை வழிநடத்த கற்றுக்கொடுக்க உதவுவதாக பத்ரி பட்டர் கூறினார். 


மேலும் கூறுகையில், "குடிசைத் தொழில்களுக்கு உதவும் நோக்கத்துடன், மதுரை மற்றும் தஞ்சாவூரில் உள்ள சிறிய களிமண் சிலை தயாரிப்பாளர்களிடமிருந்து 300 கிராமங்களிலும் கொலு  நிறுவல் சிலைகளை வாங்கியுள்ளோம். அனைத்து ஒன்பது நாட்களுக்கும் தானியங்கள்
வழங்கி வருகிறோம். 

சமூக மண்டபம் போன்ற பொது இடங்களில் கொலு நிறுவப்பட்டாலும், தங்கள் வீடுகளில் காட்சி அமைத்து, நவராத்திரி கொண்டாடுவதற்குத் கிராமவாசிகள் தாங்களாகவே முன்வந்துள்ளனர். இம்முயற்சியை தொடங்குவதற்கு மிக முக்கிய நோக்கமானது மக்களிடையே நவராத்திரி பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் மற்றும் கிராம மக்கள் இதனால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கருதியே இதனை ஏற்று செய்து வருகிறோம் என்றார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn