பெண் குழந்தைகள் உலகில் நடமாடும் தேவதைகளே - சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகள் உலகில் நடமாடும் தேவதைகளே - சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

ஒவ்வொரு வீட்டிலும் பெண்பிள்ளையை தேவதைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஏன் இந்த உலகம் முழுவதும் பெண்ணின் அடையாளத்தை தேவதையாக வர்ணிக்கின்றது. ஆனால் அதே சமூகம் தான்  தேவதைகளுக்கு பல இன்னல்களையும் தருகின்றது அவர்களுக்கான உரிமைகளையும் தர மறுக்கின்றது.


குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும்  உயர்வுக்கும் பெண் குழந்தைகள் காரணமாக இருக்கின்றார்கள் அவர்களைப் பாதுகாக்கவும் வாழ்வில் உயர்த்தவும் ஒவ்வொருவரின் கடமையாகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களுக்கான அதிகாரத்தை பெறவும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும்அக்டோபர்  11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனை பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.

பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும் இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டும்.

பட்டாம் பூச்சிகளாய் பறக்க நினைப்பவர்களுக்கு சிறகுகள் தரவில்லை என்றாலும், சிறைகளை தராமல் இருந்தால் பெண் குழந்தைகள் தங்களுடைய வாழ்வில் வானத்தை வசப்படுத்த காட்டுவர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn