6ம் கட்ட கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் - அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டதில் மூன்றாம் இடத்தை பிடித்த திருச்சி மாவட்டம்

6ம் கட்ட கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் - அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டதில் மூன்றாம் இடத்தை பிடித்த திருச்சி மாவட்டம்

தமிழகத்தில் இன்று (23.10.2021) 6-ம் கட்ட கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாநகராட்சி சார்பில் 202 இடங்களிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் 427 இடங்களிலும் என மொத்தம் 629 முகாம்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருச்சியில் கையிருப்பில் 2 லட்சம் தடுப்பூசிகள் இருந்த நிலையில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இன்று நடைபெற்ற 6ம் கட்ட கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் கோவாக்சின் மற்றும் கோவிசீீல்டு முதல் தவணை தடுப்பூசி 44,012, இரண்டாம் தவணை தடுப்பூசி 57,291 என மொத்தம் 1,01,303 தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஆறாம் கட்ட கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் தமிழக அளவில் திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,