புயல் முன்னெச்சரிக்கை - திருச்சியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு 250 பட்டாலியன் போலீசார் பயணம்!

புயல் முன்னெச்சரிக்கை - திருச்சியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு 250 பட்டாலியன் போலீசார் பயணம்!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு மீட்பு உபகரணங்களோடு 250 பட்டாலியன் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

நிவர் புயல் நாளை கரைக்கால் - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்து காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பேருந்துகள் இயக்கவும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் புயல் கரையை கடந்த பிறகு டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணியில் ஈடுபட மாநில பேரிடர் குழுவினருடன் இணைந்து செயல்பட திருச்சியிலிருந்து 3 குழுக்களாக 250 பட்டாலியன் போலீசார் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

மீட்பு பணிக்கு தேவையான அனைத்து விதமான உபகரணங்களையும் தயார் செய்து கொண்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm