இராப்பத்து 4 ஆம் நாள் - மஞ்சள் நிற வஸ்திரம் அணிந்து, சௌரிக் கொண்டை சாற்றி நம்பெருமாள்

இராப்பத்து 4 ஆம் நாள் - மஞ்சள்  நிற வஸ்திரம் அணிந்து, சௌரிக் கொண்டை சாற்றி நம்பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் : இராப்பத்து 4 ஆம் நாள் திருவாய்மொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் மஞ்சள் நிற வஸ்திரம் (பீதாம்பரம் ) அணிந்து, சௌரிக் கொண்டை சாற்றி: அதில் சூர்ய வில்லை; புஜ கீர்த்தி, தொங்கல் பதக்கம் நடுவில் அணிந்து; கர்ண பத்திரம்; ரத்தின அபய ஹஸ்தம்; ரத்தின கடி ஹஸ்தம்

(இடது திருக்கை); பங்குனி உத்திர பதக்கம்; அதன் மேல் வைர ரங்கூன் அடிக்கை; சந்திர ஹாரம்; வரிசையாக வெள்ளை கல் - சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள்; நெல்லிக்காய் மாலை; தங்க பூண் பவழ மாலை, 8 வட (18 பிடி) முத்து சரம் அணிந்து; பின்புறம் - காசு மாலை, ஜடை அணிந்து; அதன் மேல் கல் இழைத்த ஜடை தாண்டா அணிந்து;

கெம்பு கல் அரசிலை பதக்கம் நடுவில் சாற்றி; தாயத்து சரங்கள் கையில் சாற்றி; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision