14 கிலோ குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

14 கிலோ குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலையூர் 4 ரோடு அருகே உள்ள வள்ளி மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினரும் இணைந்து மேற்படி வள்ளி மளிகை கடையில் சோதணை செய்த போது, எதிரி 1. நல்லுசாமி (49) த.பெ. சுப்பையா என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 4.390 கிலோ கிராம் விற்பனைக்காக வைத்திருந்தவரை இன்று (11.09.2024) கைது செய்து. மேற்படி குட்கா பொருட்களை கைப்பற்றி, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மேற்படி நபரிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினரும் மேற்கொண்டு விசாரணை செய்த போது, எதிரி 2. போசங்கு (28) த.பெ ரெத்தினம், எதிரி 3. கிருஷ்ணமூர்த்தி (24) த.பெ ராசு ஆகியோர் மாருதி ஆம்னி வேன் மற்றும் பொலிரோ பிக்கப் நான்கு சக்கர வாகனத்தில் வந்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொடுத்து விட்டு செல்வதாக அளித்த தகவலின் பேரில்

இன்று 12:45 மணியளவில் ஓலையூர் 4 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக மேற்படி எதிரிகள் ஓட்டி வந்த TN 45 CD 7125 பொலிரோ பிக்கப் மற்றும் TN 31 BS 8785 என்ற பதிவெண் கொண்ட மாருதி ஆம்னி வேன் ஆகியவற்றை சோதனை செய்த போது மேற்படி வாகனங்களில் 9.726 கிலோ கிராம் குட்கா போதை பொருட்களை சட்டவிரோதமாக எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, மேற்படி இருவரையும் கைது செய்து, விற்பனைக்கு பயன்படுத்த மாருதி ஆம்னி வேன் மற்றும் பொலிரோ பிக்கப் வாகனங்கள் கைப்பற்றப்பட்டும். மேற்படி 3 நபர்களிடமிருந்தும் மொத்தம் 14.116 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டும். மேற்படி நபர்கள் மீது மணிகண்டம் காவல் நிலைய குற்ற எண் : 131/2024 u/s 123 BNS & 6 r/w 24 (1) Cotpa Act -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபோன்ற, குற்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களி651 (Helpline) எண்ணிற்கு தெரிவிக்கவும். தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் இரகசியம் காக்கப்படும். மேலும், நல்ல தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision