திருச்சி அருகே மரக்கன்றுகளுக்கு பிறந்தநாள் விழா

திருச்சி அருகே மரக்கன்றுகளுக்கு பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைபட்டி ஊராட்சியில் புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் சிறுவர் பூங்காவில் உள்ள மரங்களுக்கு பிறந்தநாள் விழா ஊராட்சி மன்ற தலைவர் ரோஸ்லின் சகாயமேரி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. கடந்த (11.10.20)ம் ஆண்டு பொய்கைபட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மா, நெல்லி, வேம்பு, புளியமரம், வாகை, புங்கை, இலுப்பை, நாவல், பனை, மந்தாரை, போன்ற மர வகைகளும் அரளி, பிச்சிப்பூ, நந்தியாவட்டை, போன்ற பூச்செடிகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த மரங்கள் நடப்பட்டு நேற்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பொய்கைபட்டி  ஊராட்சி சார்பில் மரங்களுக்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும், கேக் வெட்டியும் பிறந்தநாள் விழா கொண்டாடினர். மேலும் விழாவில் பேசிய வனச்சரக அலுவலர் மேரி லென்சி மரத்தின் சிறப்புகளை பற்றி மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் அடிகளார் ஜெபம் செய்து மரங்களுக்கு புனித நீர் தெளித்தார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகளை நன்கு வளர்த்தவர்களுக்கு சிறப்பு பரிசு பொருட்களும் விழாவில் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பொய்கைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா, வனச்சரக அலுவலர் மேரி லென்சி, அருட்தந்தை ஜேம்ஸ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision