பங்குனி உத்திரம் விழா - பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்திய பக்தர்கள்

பங்குனி உத்திரம் விழா - பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்திய பக்தர்கள்

தமிழ் கடவுளான முருகப்பெருமான் கோவில்களில் இன்று பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது சமயம் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அழகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள பால விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

பின்னர் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பின்னர் சக்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இந்த விழாவில் நவல்பட்டு அண்ணா நகர் மற்றும் போலீஸ் காலனி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision